கரோனா தொற்று காரணமாக போதிய இடவசதிகள் இல்லாததால் சென்னை கோட்டையில் நடைபெற வேண்டிய சட்டசபை கூட்டம் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கிற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது.
நேற்று தொடங்கிய சட்டசபை கூட்டத்திற்கு திமுக எம்எல்ஏக்கள், நீட் தேர்வுக்கு எதிரான வாசகம் அடங்கிய முக கவசம் அணிந்திருந்தனர். அவர்கள் அனைவரும் ஒன்றாக சட்டப்பேரவைக்குள் சென்றனர்.
சமீபத்தில் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ கு.க.செல்வத்துக்கு திமுக எம்எல்ஏக்கள் மத்தியில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. திமுக எம்எல்ஏக்கள் மத்தியில் அவருக்கு ஒதுக்கப்பட்ட 228ம் நம்பர் இருக்கையில் அமர கு.க.செல்வம் சென்றார்.
அப்போது அவரை, ''வாங்க'' என்று சிரித்தப்படியே திமுக எம்எல்ஏக்கள் வரவேற்றனர். ''வந்துவிட்டேன்'' என்று சிரித்தப்படியே கு.க.செல்வமும் பதில் அளித்துவிட்டு தனது இருக்கையில் அமர்ந்தார்.