Skip to main content

மக்களவையை முடக்கும் அதிமுக எம்.பி.க்கள்! - சமாஜ்வாதி கடும் தாக்கு

Published on 19/03/2018 | Edited on 19/03/2018

மத்திய அரசின் வழிகாட்டுதலின் பேரிலேயே அதிமுக எம்.பி.க்கள் மக்களவையை முடக்குவதாக சமாஜ்வாதி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. 

 

Samaj

 

சமீபத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி வெளியேறுவதாக அறிவித்தார் அக்கட்சியின் தலைவரும், ஆந்திர மாநில முதல்வருமான சந்திரபாபு நாயுடு. மேலும், அம்மாநில எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி முன்வைத்துள்ள மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் தெலுங்கு தேசம் கட்சி ஆதரித்தது.  இதனை பல எதிர்க்கட்சிகளும் ஆதரித்து வருகின்றனர்.

 

இந்நிலையில், இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரையில் அவையை நடக்கவிட மாட்டோம் என அதிமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

 

இதுகுறித்து சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த எம்.பி. ராம்கோபால் யாதவ், ‘மத்திய அரசின் வழிநடத்துதலின் பேரில்தான் அதிமுக உறுப்பினர்கள் அவையை முடக்குகின்றனர். நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்ற விடாமல் அதிமுக வேண்டுமென்றே அவையை முடக்கிக் கொண்டிருக்கிறது’ என குற்றம்சாட்டியுள்ளார்.

சார்ந்த செய்திகள்