வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு அடித்தளமாக இருக்கிற சில தொகுதிகளில் கோவையும் ஒன்று. ஏற்கனவே கோவையில் திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு பாஜக வெற்றி பெற்றுள்ளது. அந்த அடிப்படையில் இந்த தேர்தலில் குறிப்பாக கொங்கு மண்டலத்தில் அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று பாஜக தலைவர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கிறது.
அதற்கு மற்றொரு காரணம், கொங்கு மண்டலத்தில் அதிமுக வலுவாக இருக்கிறது, ஓட்டு வங்கி தங்களை வெற்றி பாதைக்கு கொண்டு செல்லும் என பாஜக தரப்பு கணக்கு போட்டுள்ளது.
கோவை, நீலகிரி, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி என இந்த பத்து தொகுதிகள் கொங்கு மண்டலத்தில் அடங்குகிறது. இந்த பத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய 5 தொகுதிகளை கூட்டணியில் பெற்று பாஜக போட்டியிடுவது என மும்முரத்தில் உள்ளது. குறிப்பாக பாஜக பலமில்லாத ஈரோட்டில் இம்முறை போட்டியிட வேண்டும் என அக்கட்சி விரும்புவதற்கு காரணம், பெரியார் பிறந்த ஈரோட்டிலேயே பாஜக செல்வாக்குடன் வளர்ந்துவிட்டது என அறிவிக்கத்தானாம். இதற்கு அதிமுக சம்மதிக்குமா? அல்லது எதிர்ப்பு தெரிவிக்குமா? என ரரக்கள் மத்தியில் பட்டிமன்றம் நடக்கிறது.