கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு அதிமுக பெரும்பான்மை வைத்திருந்த நிலையில், கீரப்பாளையம் ஒன்றியம் 9-வது வார்டில் போட்டியிட்ட கனிமொழி என்பவரின் கணவர் பாட்டாளி மக்கள் கட்சியில் மாநில பொறுப்பில் உள்ளார்.
இவர் கட்சியின் தலைவர் ராமதாஸ் மூலம் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழுத்தம் கொடுத்து கீரப்பாளையம் ஒன்றியத்தை பாமகவிற்கு விட்டு தர வேண்டுமென வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. பாமகவுக்கு 2 ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ள நிலையில் அதிமுகவில் வெற்றி பெற்ற கவுன்சில்கள் மற்றும் சுயேச்சைகள் 9 பேர் பாமக சார்பில் போட்டியிட்ட கனிமொழிக்கு ஆதரவு அளித்ததால் வெற்றி பெற்றார். திமுக சார்பில் போட்டியிட்ட இந்திராவுக்கு 4 வாக்குகள் பதிவாகியது. அதே நேரத்தில் துணைத் தலைவர் பதவிக்கு அதிமுக போட்டியிடுகிறது. ஒன்றியக்குழு தலைவர் பதவியை எண்ணி பல லட்சங்களை செலவு செய்த அதிமுக ஒன்றிய செயலாளர் விநாயகம் கடும் மன வருத்தத்தில் உள்ளார். இவரை கட்சியினர் தேற்றி வருகிறார்கள்.