அதிமுக மந்திரி ஒருத்தருக்கும், முதல்வர் எடப்பாடிக்கும் இடையே அதிருப்தி நிலவுவதாக கூறப்படுகிறது. இது பற்றி விசாரித்த போது, எடப்பாடியின் மகன் மிதுன், விருதுநகரில் ஒரு டீலிங்கில் இறங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. இதைக் கேள்விப்பட்ட மாவட்ட மந்திரியான ராஜேந்திர பாலாஜி, என் மாவட்டத்தில் அவர் ஏன் தலையிடுகிறார், மிதுன் யார் என்று ஏகத்துக்கும் அமைச்சர் கோபமானதாக கூறுகின்றனர். உடனே முதல்வர் எடப்பாடியைத் தொடர்புகொண்டு, ஒருமையில் பேச ஆரம்பித்திருக்கிறார். அதற்கு எடப்பாடியோ பிறகு ’நிதானமா’ பேசிக்கலாம் என்று சொல்லியும் கேட்காமல், அகராதியே அசிங்கப்படும் சொற்களில் வசைமாரி பொழிஞ்சிருக்கார் என்கின்றனர்.
இதைக்கேட்டு டென்ஷனான எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சைத் தொடர்பு கொண்டு, இனி அவர் என் அமைச்சரவையில் இருக்கக் கூடாது என்று சொல்ல, அண்ணே விடுங்க. இதுக்கெல்லாம் சங்கடப்படாதீங்க. அவருக்கே அவர் என்ன பேசினார் என்று தெரியாது என்று கூறியுள்ளார். இதையெல்லாம் சாஃப்ட்டாத்தான் ஹேண்டில் பண்ணணும் என்று எடப்பாடியை பலவாறாகப் பேசி சமாதானப்படுத்தியுள்ளார் என்று கூறுகின்றனர்.