Skip to main content

காஷ்மீரில் காங்கிரஸ் தலைவர்கள் கைது! கொந்தளித்த ராகுல் காந்தி!

Published on 17/08/2019 | Edited on 17/08/2019

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு 70 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கி நாடாளுமன்றத்தில் அறிவிப்பை வெளியிட்டது. மேலும் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரு யூனியன் பிரதேசங்களாக இருக்கும் என்று அறிவித்தது. இதனையடுத்து காஷ்மீரில் அனைத்து தோலை தொடர்புகளும் துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும், மொபைல் மற்றும் லேண்ட் லைன் சேவைகள் மீண்டும் வழங்கப்படும், அடுத்த வாரம் பள்ளிகள் திறக்கப்படும் என காஷ்மீர் நிர்வாகம் அறிவித்தது. பதட்டமான சூழலில் அங்கிருக்கும் அரசியல் தலைவர்களை வீட்டுக்காவலில் மத்திய அரசாங்கம் வைத்துள்ளதாக கூறினார். 
 

rahul



இந்த நிலையில்  காஷ்மீரில் அம்மாநில காங்கிரஸ் தலைவர் குலாம் அகமது மீர் மற்றும் அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் ரவிந்தர் சர்மா ஆகியோர் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர். அப்போது அங்கு வந்த போலீசார் அவர்களை கைது செய்தனர். இது குறித்து கேள்விப்பட்ட ராகுல் காந்தி அரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இது குறித்து தனது  ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி இந்த கைது நடவடிக்கை தேசிய கட்சியின் மீதான தாக்குதல், இந்த அரசு ஜனநாயக அமைப்புக்கு கொடுத்த மற்றொரு அடி. எப்போது இந்த முட்டாள்தனம் முடிவுக்கு வரும்? மோடி அரசின் இந்த சர்வாதிகார நடவடிக்கைக்கு நாங்கள் கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். மேலும், அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்