Published on 26/10/2018 | Edited on 26/10/2018

சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் கருணாஸ் எம்எல்ஏ ஆஜரானார்.
முதல்வரை விமர்சித்தது உள்ளிட்ட வழக்குகளில் கருணாஸ் நிபந்தனை ஜாமீனில் உள்ளார். நிபந்தனை ஜாமீனில் உள்ள அவர் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார். இந்த வழக்குகள் சென்னை எழும்பூர் நிதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் எழும்பூர் நீதிமன்றதில் கருணாஸ் ஆஜரானார்.
அப்போது தேவர் குருபூஜையில் பங்கேற்க அக்டோபர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் கையெழுத்திட 3 நாட்களுக்கு விலக்கு கோரி மனு அளித்தார்.