நடந்துமுடிந்த கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, முதல்வர் வேட்பாளர்களின் தற்போதைய நிலை என்ன என்பதைப் பார்க்கலாம்.
மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முதல்வர் வேட்பளரான எச்.டி.குமாரசாமி, ராமநகரா தொகுதியில் 2,000 வாக்குகள் வித்தியாசத்திலும், சன்னபட்னா தொகுதியில் 5,860 வாக்குகள் வித்தியாசத்திலும் முன்னிலையில் இருக்கிறார்.
பா.ஜ.க. முதல்வர் வேட்பாளரான பி.எஸ்.எடியூரப்பா, தான் போட்டியிட்ட ஷிகாரிபுரா தொகுதியில் 12,194 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
தற்போதைய முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளருமான சித்தராமையா, படாமி தொகுதியில் 3,216 வாக்குகள் முன்னிலையிலும், சாமுண்டீஸ்வரி தொகுதியில் 17,344 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவைச் சந்தித்திருக்கிறார்.
ஒட்டுமொத்தமாக பா.ஜ.க. 114 தொகுதிகள், காங்கிரஸ் 55 தொகுதிகள் மற்றும் ம.ஜ.க. 37 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.