Skip to main content

அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா திமுகவில் இணைய திட்டம்? பின்னடைவை நோக்கி அதிமுக... அதிர்ச்சியில் எடப்பாடி!

Published on 02/01/2020 | Edited on 02/01/2020

அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. அன்வர்ராஜா, தி.மு.க.வுக்கு செல்ல இருப்பதாக தகவல் வருகிறது.  இது பற்றி விசாரித்த போது, இஸ்லாமியரைக் குறிவைத்து மோடி அரசு கொண்டுவரும் சட்ட திருத்தங்களை எல்லாம் நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் ஆதரித்து வாக்களித்ததை, அந்தக் கட்சியில் உள்ள இஸ்லாமியப் பொறுப்பாளர்களாலேயே ஜீரணிக்க முடியவில்லை என்கின்றனர். இதையும் சகித்துக் கொண்டு யாராவது இருந்தால் அவர்களை இஸ்லாமிய ஜமாத்தினர், அங்கங்கே விலக்கிவைக்கும் வைபவங்களும் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் தான் அ.தி.மு.க. அமைச்சரான நிலோபர் கபில், எங்க வேலூர் மாவட்டத்தில் பா.ஜ.க.வோடு கூட்டணி இல்லை என்று வெளிப்படையாக சொல்லியிருக்கிறார். 
 

admk



இவரைத் தொடர்ந்து தற்போது, தங்கள் சமூகத்தினரின் அ.தி.மு.க. மீதான கோபதாபங்களைப் பார்த்த அன்வர்ராஜா, கட்சிக் கோட்பாட்டையும் மீறி, குடிமக்கள் சட்டத்திருத்த மசோதா பற்றியும், தேசிய குடிமக்கள் பதிவேடு பற்றியும் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளார். இது அ.தி. மு.க. தலைமைக்கு கசப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால் இனியும் அ.தி.மு.க.வில் இருப்பது சரியில்லை என்கிற முடிவுக்கு வந்த அன்வர், தி.மு.க.வுக்குப் போகலாம் என்கிற  முடிவுக்கு வந்துவிட்டார் என்கின்றனர். இது தி.மு.க. தலைமைக்கு தெரியவந்துள்ளது. இதனால் தி.மு.க. தலைமை அன்வரை கட்சிக்குள் அழைத்துக்கொள்வது பற்றி ஆலோசனையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்