சென்னை விமானநிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது பேசிய அவர், எனக்கும் மாணவர்களுக்குமிடையே நடக்கும் உரையாடலை யாராலும் தடுக்கமுடியாது, அவர்களது பதட்டம் என்ன என்பது எனக்கு புரிகிறது, இந்த உரையாடல் ஒரு மாற்றத்திற்கான பரஸ்பர உரையாடல் அதனால்தான் அது நடந்துகொண்டிருக்கிறது என கூறினார். மேலும் அவர்,
எல்லா துறைகளிலும் பாலியல் தொல்லைகள் உள்ளன. திரைத்துறை அதில் தனியாக தெரிகிறது அவ்வளவுதான் என்றும், தேவர்மகன் 2 என ஒரு புரிதலுக்குதான் சொன்னேனே தவிர அது தலைப்பு அல்ல. ராஜ் கமல் தயாரிப்பில் வெளிவந்த 6வது படம் என சொல்வதைக்காட்டிலும், தேவர்மகன் என்றால் புரியும் என்பதற்காகதான் சொன்னேன். கண்டிப்பாக இது ஜாதி ஒழிப்பு படமாகதான் இருக்கும், எல்லா சாதிக்கும் எதிரான படமாகதான் இருக்கும்.