Skip to main content

மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் கட்சிக்கொடி ஏற்றுகிறார் கமல்!

Published on 17/02/2018 | Edited on 17/02/2018
kamal haasan

 

வரும் 21ம் தேதி அன்று அரசியல் கட்சியை துவக்கி,கொடியை அறிமுகப்படுத்துகிறார் கமல்ஹாசன்.  இதற்கான சுற்றுப்பயண அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

முன்னதாக அவர், சென்னை தி.நகரில்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவை சந்தித்து பேசினார்.

 

இந்த சந்திப்பு குறித்து கமல்ஹாசன், ’’எனது மக்கள் பணி சிறக்க வேண்டும் என்பதால் நல்லகண்ணுவை சந்தித்து பேசினேன். மதுரையில் 21-ம் தேதி நடக்கும் மாநாட்டில் பங்கேற்க நல்லகண்ணுக்கு அழைப்பு விடுத்துள்ளேன்’’ என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 

சுற்றுப்பயணம் விபரம்:
 

kamal kodi

சார்ந்த செய்திகள்

Next Story

"முதலமைச்சராக சிறப்பாக பணியாற்றுகிறார்"- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பாராட்டு!

Published on 01/01/2022 | Edited on 01/01/2022

 

"Excellent service as Chief Minister" - Former Minister Cellur Raju Praise!

 

ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.

 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, "அனைவரும் நோய்நொடியின்றி வாழ வேண்டியும், 'ஒமிக்ரான்' கரோனா தொற்று நீங்க வேண்டியும், கரோனா இல்லாத உலகமாக மாற வேண்டும் என மீனாட்சியம்மனை குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்துள்ளோம்.

 

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையை அ.தி.மு.க. அரசு செய்தது போல தி.மு.க. அரசும் செயல்பட வேண்டும். மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக சுறுசுறுப்பாகப் பணியாற்றுகிறார், அவரோடு சேர்ந்த அனைவரும் பணியாற்றி கரோனா பரவலைக் குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

 

தமிழ்நாடு மக்களுக்கு தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது அளித்த வாக்குறுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என்பதை தி.மு.க. அரசு செயல்படுத்தும் என்று நம்புகிறேன். ஒமிக்ரான் பரவல் அதிகரிப்பால், தமிழ்நாட்டில் மற்றொரு ஊரடங்கு வருமோ? என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.

 

புத்தாண்டு நாள் என்பதால் நகைக்கடன் குறித்து இன்று எதுவும் பேச வேண்டாம். மதுரை மாநகராட்சி கிராமம் போல உள்ளது. வீதியெங்கும் சாக்கடை பெருக்கடுத்து ஓடும் நிலை உள்ளது. அ.தி.மு.க. சார்பில் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து வரும் ஜனவரி 4- ஆம் தேதி மதுரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.

"Excellent service as Chief Minister" - Former Minister Cellur Raju Praise!

மதுரை மாநகராட்சிக்கு ஆயிரம் கோடி நிதி வழங்க வேண்டும். அந்த நிதியை முதலமைச்சர் நிச்சயம் அளிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என எந்த நிலையில் இருந்தாலும், அ.தி.மு.க. மக்களின் நலனுக்காக போராடும்.

 

வரலாற்றில் இதுவரை எந்தவொரு இந்திய பிரதமரும் பேசாத வகையில் தமிழ் கலாச்சாரத்தையும், பெருமையையும் பற்றி பேசிவருபவர் மோடி,  உலகெங்கும் தமிழர்களின் கலாச்சார பெருமையை பறைசாற்றி வருகிறார். திருக்குறள், புறநானூறு, ஆகியவற்றை ஐ.நா. வரை எடுத்துச் சென்று பேசி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.

 

பிரதமர் நரேந்திர மோடி மதுரை வருகை என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடியது. மதுரை வரும் பிரதமரை தமிழ்நாட்டு மக்கள் வாழ்த்தி வரவேற்க வேண்டும். மேலும் தி.மு.க .எதிர்க்கட்சியாக இருந்தபோது மோடியை எதிர்த்துவிட்டு, தற்போது வரவேற்பு அளிப்பதில் இருந்தே மக்களுக்கே தெரியும் தி.மு.க.வின் நிலைப்பாடு என்னவென்று" எனக் கூறினார்.