







Published on 03/06/2021 | Edited on 03/06/2021
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் 98வது பிறந்தநாளையொட்டி திமுகவினர் அவரது நினைவிடத்திற்கும், உருவப்படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்திவருகின்றனர். மேலும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பல பயனுள்ள திட்டங்களைத் துவங்கிவைக்கவும் உள்ளார்.
அதேபோல், மாவட்டத்திற்கு 1,000 மரக்கன்றுகள் வீதம், அனைத்து மாவட்டங்களிலும் 38 ஆயிரம் மரக்கன்றுகளை நடவுள்ளனர். அந்த வகையில் சென்னை கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் இல்லத்தில் நடைபெற்ற கலைஞரின் பிறந்தநாள் விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.