மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சியில் தனது உரையை தமிழில் தொடங்கிய பிரதமர் மோடி, “தமிழக மக்களுக்கு தலைவணங்குகிறேன். பாரதியார் மண்ணில் நிற்பதற்கு பெருமைப்படுகிறேன். ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சி. கனவு திட்டமான மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தை தொடங்கி வைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
மேலும், “உஜ்வாலா திட்டத்தில் 3.5 கோடி இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. சூரிய மின்சக்த்து, தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பெண்களின் கல்விக்கு உதவி செய்யும்போது அந்த குடும்பமே பயன்பெறுகிறது. தமிழகத்திற்கு காங்கிரஸ் ஆட்சியில் வழங்கிய நிதியைவிட கூடுதலாக மத்திய அரசு வழங்கியுள்ளது” என்றார்.
’’சுகாதாரம், விவசாயிகள் நலன் ஆகியவற்றை இலக்காக வைத்து மத்திய அரசு செயல்படுகிறது சுயவேலைவாய்ப்புத் திட்டத்தில் 70% பயனடைவது பெண்களே: தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் பெண்கள் பயன்பெறுகின்றனர்’’என்றும் தனது பேச்சில் குறிப்பிட்டார்.
- இளையர்