Published on 22/08/2019 | Edited on 22/08/2019
சசிகலாவுக்கு 68-வது பிறந்த நாளும் சிறையில்தான் நடந்தது. போன முறை, உள்ளே இருந்தவங்களுக்கு ஸ்வீட் கொடுத்துக் கொண்டாடிய சசி இந்தமுறை மவுன விரதம் கடைப்பிடித்த படி, நாள் முழுக்க ஏதோ சிந்தனையிலேயே இருந்தாராம். ரிலீஸ் ஆகாமல் ஜெயிலில் இருந்தாலும், நேரடி அதிகாரம் கையை விட்டுப் போய்விட்டாலும், சசிகலாவுக்குன்னு இன்னமும் தமிழக அரசு அதிகாரத்தில் ஒரு பவர் இருக்குதுங்கிறதை அவர் பிறந்தநாளில் பார்க்க முடிந்தது.

ஜெ. இருக்கும்போது, ஜெ-சசி ரெண்டு பேரின் பிறந்த நாளில் தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான சைவ-வைணவத் திருக்கோயில்களில் சிறப்பு பூஜைகளை ஏற்பாடு செய்வார் சசிகலா. அங்கங்கே இருக்கும் அதிகாரிகளும் அர்ச்சகர்களும் அதற்கான வேலைகளில் ஜரூரா களமிறங்கிடுவாங்க. 2016 செப்டம்பரில் ஜெ.’அப்பல்லோவில் அட்மிட் ஆன நேரத்திலும், சசிகலா உத்தரவுப்படி, தமிழகம் முழுக்க ஒரே நாள்ல அனைத்து மத வழிபாட்டுத் தலங்கள்லயும் காலை 6-ல் இருந்து 7 மணிக்குள் சிறப்பு பூஜைகளும் பிரார்த்தனைகளும் நடத்தப்பட்டுச்சு. அப்ப இருந்த அதே அர்ச்சகர்களும் இப்பவும் அதிகாரிகளும்தான் பெரும்பாலும் இருக்காங்க. அதனால் சசிகலா பிறந்தநாளான ஆகஸ்ட் 18 அன்று ஸ்பெஷலா வேத மந்திரங்கள் ஓதி பூஜை நடந்திருக்குது.
பவரில் இருந்தப்ப ஜெ-சசிக்கு ஸ்பெஷல் பூஜைகள் நடந்த திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் தொடங்கி, ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை, சமயபுரம், மன்னார்குடின்னு பல இடங்களிலும் சசி குடும்பத்தார் சொன்னபடி சிறப்பு பூஜை செஞ்சிருக்காங்க. திருவண்ணாமலை கோயில் பூஜை பற்றி மாவட்டத்தை சேர்ந்த அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கவனத்துக்குப் போயிருக்கு. அமைச்சர் தரப்போ வழக்கமா என்ன நடக்குமோ அதைச் செய்திடுங்கன்னு சொல்லிட்டாராம். சசிக்கான சிறப்பு பூஜைகளுக்கு எடப்பாடி அரசின் பூரண ஒத்துழைப்பு இருந்திருக்குனு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இதை உற்று கவனித்து வரும் பாஜகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது.