திமுகவின் முப்பெரும் விழா செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளிகொண்டா அடுத்த கந்தநேரி பைபாஸ் சாலை அருகில் நடைபெற்றது.
இதில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, “இளைஞர் அணி கொடிகட்டி பறந்துகொண்டிருக்கிறது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களும், அடுத்து என்ன செய்ய போகிறார்கள் என இளைஞர் அணித் தலைவரை பார்த்து அஞ்சுகிறது. இதற்கு காரணம் பொறாமை தான் வேறு ஒன்றும் கிடையாது.
அவர் (உதயநிதி ஸ்டாலின்) தன் அப்பாவை பார்த்து மட்டும்தான் அஞ்சுகிறார். அவர் என்ன வேண்டுமானாலும் பேசுகிறார். என்ன வேண்டுமானாலும் பேசலாம், பேசிவிட்டு சமாளிக்கலாம் எனும் நினைப்பில் அவர் பேசுகிறார். ஆனால், தன் கையில் வைத்துக்கொண்டிருக்கும் பொருள் கீழே விழுந்து உடைந்துவிடக்கூடாது எனும் நல்ல எண்ணத்தையும் மனதில் வைத்துக்கொண்டு மிகச் சிறப்பாக அவர் பணியாற்ற வேண்டியது அவரின் கடமை என்பதையும் நான் எச்சரிக்கை விரும்புகிறேன். நாம் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் கவனமாக எடுத்துவைக்க வேண்டும்” என்று பேசினார்.