Skip to main content

பயணத்தை பாதியிலேயே முடித்து கொண்டு சென்னை திரும்புகிறாரா எடப்பாடி? அதிர்ச்சி தகவல்!

Published on 06/09/2019 | Edited on 06/09/2019

வெளிநாடு முதலீடுகளை ஈர்ப்பதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி. அவருடன் அமைச்சர் விஜயபாஸ்கர், ராஜேந்திர பாலாஜி, உதயகுமார், எம்.சி.சம்பத் ஆகியோரும் சென்றுள்ளனர். மொத்தம் 14 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா, லண்டன், துபாய் ஆகிய நாடுகளுக்கு செல்ல திட்டமிட்ட எடப்பாடி லண்டனிலிருந்து அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்காவில் இன்று டெஸ்லா மின்சார கார் நிறுவனத்தை பார்வையிட்டுள்ளார். இந்தப் பயணத்தில் தமிழகத்தில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலதிபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முதலீடுகளை ஈர்க்கவும் திட்டமிட்டுள்ளனர். 
 

eps



அதே போல் எடப்பாடி வெளிநாடு பயணம் செல்லும் போது தமிழகத்தில் முதல்வர் பொறுப்பை யாரிடமும் கொடுக்காமல் சென்றது பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. இருந்தாலும் தமிழகத்தில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளை தனக்கு நெருக்கமான அமைச்சர்களான வேலுமணி மற்றும் தங்கமணியிடம் கேட்டு தெரிந்து கொள்வதாக சொல்கின்றனர். இந்த நிலையில் ஆகஸ்ட் 18ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி தொடங்கிய பயணத்தில் லண்டன், அமெரிக்கா மற்றும் துபாய் செல்ல திட்டமிட்டனர். இதுவரை லண்டனில் சுற்றுப்பயணம் முடித்துவிட்டு அமெரிக்காவில் இருக்கும் எடப்பாடி துபாய் செல்லாமல் சென்னை வந்து சில நாட்கள் அரசியல் பணிகளை முடித்துக்கொண்டு, பின்பு சென்னையில் இருந்து மீண்டும் துபாய் செல்ல இருப்பதாக தகவல் சொல்லப்படுகிறது. இதன் பின்னணி என்னவென்று அதிகாரபூர்வ தகவல் அரசு தரப்பில் இருந்து இன்னும் வெளிவரவில்லை.
 

சார்ந்த செய்திகள்