மக்கள் பிரதிநிதிகள் மக்கள் சார்ந்த ஆட்சியில் ஆளுநர் ஜனாதிபதி ஆகியோர் நடுநிலையாக செயல்பட வேண்டும். ஆனால் அவ்வாறு இருக்கிறதா எனத் தெரியவில்லை என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் இன்றுய் செய்தியளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஆளுநர், ஆன்லைன் சூதாட்ட அவசர சட்டம் கொண்டு வந்ததுக்கு கையெழுத்திட்டார். ஆனால் சட்டமன்றத்தில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதிற்கு இன்னும் கையெழுத்து இடவில்லை. ஏன் என எனக்கு புரியவில்லை. ஆளுநர் கால தாமதம் செய்யாமல் இன்றே அதற்கு கையெழுத்து இட வேண்டும்.
லட்சக்கணக்கான குடும்பங்களை ஆளுநர் காப்பாற்ற வேண்டும். இது தமிழ்நாட்டு மக்கள் பிரச்சனை. அதே நேரத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசிற்கு ஆளுநர் மதிப்பளிக்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் மக்கள் சார்ந்த ஆட்சியில் ஆளுநர் ஜனாதிபதி ஆகியோர் நடுநிலையாக செயல்பட வேண்டும். ஆனால் அவ்வாறு இருக்கிறதா எனத் தெரியவில்லை.
2026ல் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் நாங்கள் ஆட்சி அமைப்போம். அதற்கான வியூகங்களை 2024ல் அமைப்போம்” எனக் கூறினார்.