தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், கடந்த ஜனவரி மாதம் 26- ஆம் தேதி, குடியரசு நாளன்று காணொலி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் நாடு முழுவதும் சமூகநீதிக் கொள்கையை முன்னெடுத்து, பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் இடஒதுக்கீடு உள்ளிட்ட நலன்களைப் பாதுகாத்திட “அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பு” தொடங்கப்படும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பினை வெளியிட்டார்.
அதன்படி, சோனியா காந்தி உட்பட இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் அரசியல் கட்சி தலைவர்களுக்குக் கடிதத்தை 02/02/2022 அன்று அனுப்பி, இக்கூட்டமைப்பில் இணையுமாறு கேட்டுக்கொண்டிருந்தார். இந்நிலையில் அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்புக்கான காங்கிரஸ் கட்சி பிரதிநிதியாக வீரப்பமொய்லி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கடிதத்தை சோனியா காந்தியிடம் திமுக எம்.பி டி.ஆர்.பாலு வழங்கினார். அதேபோல் சமூகநீதி கூட்டமைப்புக்கு மக்கள் ஜனநாயக் கட்சி முழு ஒத்துழைப்பு தரும் என மெகபூபா முஃப்தியும் அறிவித்துள்ளார்.