தமிழகத்தில் உள்ள அணைத்து கட்சிகளும் இடைத்தேர்தலில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் கள நிலவரம் எப்படி இருக்கு என்று எடப்பாடி கட்சி நிர்வாகிகள் மற்றும் உளவுத்துறையிடம் விசாரித்துள்ளார்.கள நிலவரத்தை விசாரித்த இபிஎஸ் ஆடிப் போய் உள்ளாராம். இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்பதே எடப்பாடியின் முதல் நோக்கமாக உள்ளது என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்த தேர்தலுக்கு பிறகு ஆட்சி மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்ற முனைப்பில் திமுக, மற்றும் தினகரனின் அமமுக கட்சிகள் தீவிரம் காட்டி வரும் நிலையில் கள நிலவரத்தை அறிய உளவுத்துறையிடம் எடப்பாடி பழனிச்சாமி விசாரித்துள்ளார்.
அப்போது எதிர்கட்சிகளை விட அதிமுகவில் உட்கட்சி பூசல் அதிகமாக இருப்பதால் தேர்தல் வேலைகளை யாரும் செய்வதில்லை என்று கூறியுள்ளனர் இதனால் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். இதற்கு என்ன காரணம் என்று விசாரித்தபோது அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் இரண்டு பேரும் ஒன்றாக இருந்தாலும் இன்னும் அவர்களுக்குள் ஒரு மித்த கருத்து எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அதிமுகவில் நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தலில் சீட் கிடைக்காதவர்கள் கட்சி மாறும் மனநிலையில் இருப்பதாகவும் அதனால் தேர்தல் பணியில் எந்த ஈடுபாடும் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தி அடைந்த எடப்பாடி நான்கு தொகுதிகளிலும் 10-க்கும் மேற்பட்ட மாவட்ட நிர்வாகிகளை பொறுப்பாளர்களாக நியமித்துள்ளார்.அந்த நிர்வாகிகள் கொடுக்கப்பட்ட வேலைகளை ஒழுங்காக செய்கிறார்களா என்பதை கவனிக்க ஒரு சில தனக்கு நெருக்கமான அமைச்சர்களை நியமித்துள்ளாராம். மேலும் இதனை பயன்படுத்தி அதிர்ப்தியாளர்களை தங்கள் பக்கம் இழுக்க ஒரு சில வேலைகளை தினகரன் கட்சியினர் செய்துவருவதாகவும் கூறப்படுகிறது.நிலைமை இப்படி இருக்க அதிமுக கட்சியினரே உள்ளடி வேலைகளை செய்து வருவது எடப்பாடிக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.