விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களுக்காக பாடுபட்டுவரும் தலித் அல்லாத சான்றோரைப் போற்றும் வகையில் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டு தோரும் அம்பேத்கர் சுடர் எனும் விருது வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் பெரியார் ஒளி, அயோத்திதாசர் ஆதவன் , காமராசர் கதிர், காயிதேமி்ல்லத் பிறை , செம்மொழி ஞாயிறு ஆகிய விருதகளும் சான்றோர்களுதக்கு வழங்கப்பட்டு வருகின்றன. விருது பெருவோர்களுக்கு தலா ரூ. 50,000 பொற்கிழியும் வழங்கப்படுகிறது.
தாழ்த்தப்பட்டோருக்காக பாடுபடுவோரை ஊக்கப்படுத்தும் தலித் அல்லாத சனநாயக சக்திகளை அடையாளப்படுத்துவதும் தலி்த் மற்றும் பிற சமூகத்தினருக்கிடையில் நல்லிணக்கத்தை வளர்த்தெடுக்கும் விடுதலை சிறுத்தைகளையின் கடமை என்ற வகையில் இந்த விழா ஆண்டுதோறும் ஒருங்கிணைக்கப்படுகிறது.
அந்த வகையில் இந்த 2019 ஆண்டிற்கான அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு விருதுகள் வழங்கும் விழா 08.08.19 தேதி சென்னை தேனாம்பேடேடை காமராசர் அரங்கில் மாலை 4 மணிக்கு நடைபெற்றது. இதில் அம்பேத்கர்சுடர் விருது இந்து என்.ராம் அவர்களுக்கும், பெரியார் ஒளி விருது டாக்கடர் வி. விஸ்வநாதன் அவர்களுக்கும் , காமராசர் கதிர் விருதனை எஸ்.பீட்டர் அல்போன்ஸ் அவர்களுக்கும், அயோத்திதாசர் ஆதவன் விருது டாக்கடர் என் நாகப்பன் அவர்களுக்கும் , காயிதே மில்லத்பிறை அறிஞர் செ.திவான் அவர்களுக்கும் , செம்மொழி ஞாயிறு கல்வி நா. குப்புசாமி அவர்களுக்கும் வழங்கி சிறப்பித்தனர். இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரான வன்னியரசு அனைவரையும் வரவேற்று வரவேற்புரை வழங்கி தொடங்கிவைத்தார்.
அதன்பிறகு விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் உரை நிகழ்த்தினார். மத்திய அரசின் அலங்கோல ஆட்சியால் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒற்றைப்பண்பாட்டை மத்திய அரசு திணிக்கப்பார்க்கிறது. பண்பாட்டு வறுமை, கலாச்சார வறுமை மிகவும் கொடுமையானது. அதனை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சி செய்கிறது. கொடுத்து செழித்த தலித் மக்களை கீழ்மைப்படுத்துகிற நிக்ழவுகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது என்றார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ்: பெரும் தலைவர்களாக இருப்பார்கள். ஆனால் நமக்கு யார் விரோதிகளோ அவர்களோடு அடிமடியில் கைகோர்த்து கொண்டிருப்பார்கள். உண்மைகள் விரைவில் வெளிவரும். திருமாவளவன், தனி சமூகத்தின் ஒரு தலைவராக நான் அவரை பார்த்தது கிடையாது.
10 லட்சம் வேலை வாய்ப்புகள் போய்விட்டன. மாணவர்கள் தற்கொலை செய்து வருகின்றனர் அதை கேட்பதற்கு யாரும் இல்லை. விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். அதை கேட்பதற்கு யாரும் இல்லை. தற்போது கார்ப்பரேட் நிறுவன தலைவர்களும் தற்கொலை செய்து வருகின்றனர். நாடாளுமன்றத்தில் ஒரு சமூகத்தின் குரலாக ஒலிக்க மாட்டார் தமிழர்களின் குரலாக ஒளிப்பார்.
மூத்த பத்திரிகையாளர் என்.ராம்: எந்த ஒரு அரசியல் தலைவர்களும் அம்பேத்கருக்கு நிகராக இருக்க முடியாது. அம்பேத்கர் எழுப்பிய கேள்விக்கு இன்றைக்கும் நம் சமுதாயத்தில் பதில் கிடைக்கவில்லை. இளைஞர்களை வழிநடத்தும் ஒரு தலைவராக இருப்பது மிகவும் பெரியது. அதை திருமாவளவன் செய்து வருகிறார். அம்பேத்கர் இருந்திருந்தால் திருமாவளவன் வழி சரியான வழி என்று வரவேற்று இருப்பார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்: தலித் அல்லாதவர்களுக்கு டாக்டர் அம்பேத்கர் விருது வழங்குவதில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பெருமை. இதற்காக பலர் என்னை விமர்சனம் செய்துக் கொண்டு வருகின்றனர். பிறப்பி;d அடிப்படையில் நாங்கள் விருது வழங்கவில்லை. அவர்களது ஆற்றல் மிகு செயல்பாடுகள் காரணமாக விருதுகள் வழங்கப்படுகிறது.
திருமாவளவன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பொது நீரோட்டத்தோடு இணையும்போது விமர்சனம் செய்கிறார்கள். அதனை கண்டு நாங்கள் துவண்டு போவதில்லை. இந்த இயக்கத்தை அழிக்க வேண்டும் திருமாவளவனை அழிக்க வேண்டும் என பலர் நினைக்கின்றனர்.
தேர்தல் வேண்டாம் என நினைத்து தொடக்கப்பட்ட தலித் இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தான். விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது சாதி முத்திரைக் குத்தப்படுகிறது. அது தவறு இல்லை. ஆனால் அதில் உள்நோக்கம் உள்ளது. ஒட்டுமொத்த சமுதாய மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று தான் விடுதலை சிறுத்தைகள் போராடி வருகிறது.
39 மசோதாக்கள் கொண்டு வரப்பட்டன. 23 மசோதாக்கள் மீது பேசினேன் அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவான நீரோட்டத்தில் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி பயணிக்கிறது. எனக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தம் குறையவில்லை. பாசிச சக்திகள் கைகளில் நாடு சிக்கிக் கொண்டுள்ளதே என்ற அச்சம் எனக்கு ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் அவையில் பேச எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை எனற வலி எனக்கு உள்ளது. திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளேன்.
அமித்ஷா என்ன புரட்சி செய்துவிட்டார். காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட தனிச்சட்டத்தை ரத்து செய்ததற்காக அவருக்கு ஒட்டுமொத்த அவையே ஆரவாரம் செய்கின்றனர். மோடி அவைக்கு வரும் போது ஆரவாரம் செய்தபோது ஏன் இப்படி ஆரவாரம் செய்கிறீர்கள் என்று ஒருவர் கேள்வி எழுப்பியதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா எழுந்து இந்த அவையில் முழங்கவில்லை என்றால் நாடு முழுவதும் மோடிக்கு ஆதரவான முழக்கம் எழுப்பப்படும் என்று கூறுகிறார்.
நாட்டை ஆளும் உள்துறை அமைச்சர் உணர்ச்சிவசப்பட்டு பேசுகிறார். ஒரு அநீதியை இழைத்துவிட்டு இவர்கள் கொண்டாட்டம் போடுகிறார்கள். வரலாறு தெரிந்தவர்கள் யாரும் இந்த முடிவை கொண்டாட மாட்டார்கள். அன்னைக்கு காங்கிரஸ் என்ன செய்தது என்று இன்றைக்கு பேசுவது நியாயமில்லை. எடுத்தோம் என்று கவிழ்த்தோம் பேசிவிடக் கூடாது. காலச் சூழலுக்கு ஏற்றவாறு காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது.
370 சட்டத்திற்கு எதிராக அம்பேத்கர் என்றைக்குமே பேசியதில்லை. தமிழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு பெற்றிருந்தால் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களை செயல்படுத்த முடிந்துருக்காது. காங்கிரஸ் கட்சி போதிய வலிமையோடு இல்லாததால் அவர்களும் ஒன்றும் செய்ய முடியாத நிலை உள்ளது.
கடந்த தேர்தலில் காங்கிரசோடு கைக்கோர்க்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வலியுறுத்தினோம். ஆனால் அதனை அவர்கள் செய்யாதன் விளைவுதான் இன்று நாடு மிகப் பெரிய விளைவை சந்தித்துள்ளது. மத்திய அரசின் இந்த தவறை எதிர்க்கும் விதமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விரைவில் ஆர்பாட்டம் நடத்துவோம்.அதற்காக எங்களின் போர்க்குரலை எழுப்ப பதிவு செய்வோம். மத்திய அரசின் புதியக் கல்விக் கொள்கை எதிர்த்து மாணவர்கள் மற்றும் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.