அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மூன்று நாள் ஆன்மீக பயனமாக கும்பகோணம் பகுதிக்கு சென்றார்.
பிளாஞ்சேரியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், " ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கு தமிழக அரசு ரூ.10 கோடி வழங்கி, நிதி திரட்டலை தொடங்கி வைத்தது. இதில் 6 மில்லியன் அமெரிக்க டாலர் சேர்ந்தது. இந்த நிதியை ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் வழங்கிவிட்டோம். சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு பேராசிரியரின் தலைமையில் தமிழ் இருக்கை அமைய உள்ளது. இதற்கான ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருகிறது.
மேலும் ஹார்வேர்டு பல்கலைக் கழகத்தின் தென்னிந்திய படிப்புகள் துறையும் தமிழ் பல்கலைக் கழகமும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளனர். இதன்மூலம் தமிழின் ஆராய்ச்சித் தரத்தை மேலும் மேம்படுத்திக் கொள்ள முடியும் " என்றார்.
திவாகரன், தினகரன் மோதல் குறித்து கேட்டதற்கு, சிரித்தபடி மழுப்பிவிட்டு பதில் சொல்லாமல் புறப்பட்டுவிட்டார்.