Skip to main content

“அண்ணன் மு.க. ஸ்டாலின்” - முதல்வருக்கு ஆளுநர் தமிழிசை வாழ்த்து

Published on 28/02/2023 | Edited on 28/02/2023

 

Governor Tamilisai congratulates "Brother M.K.Stalin" Chief Minister

 

முதலமைச்சர் பிறந்தநாளையொட்டி அவருக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

 

தமிழ்நாட்டின் முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க. ஸ்டாலின் தனது 70 ஆவது பிறந்தநாளை மார்ச் 1 ஆம் தேதியான நாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் திரைப் பிரபலங்களும் வாழ்த்துகளைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர். மேலும், முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் குறித்த புகைப்படக் கண்காட்சியை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் துவக்கி வைத்தார். நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

 

இந்நிலையில், தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அண்ணன் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்... மக்களுக்கு ‘தி’னமும் ‘மு’ழு உடல் நலத்துடன் ‘க’டமையாற்ற பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்....” எனக் கூறியுள்ளார்.


 

சார்ந்த செய்திகள்