Published on 16/12/2019 | Edited on 16/12/2019

தமிழக விவசாயிகள் நலன் கருதி சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களை பின்பற்றி நெல் குவிண்டால் 1க்கு ரூ 2500/- வழங்க தமிழக அரசை வலியுறுத்தி நாளை 17.12.2019 காலை 10 மணிக்கு சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகிலிருந்து விவசாயிகள் ஊர்வலமாகப் புறப்பட்டு கோட்டையை முற்றுகையிட்டு தனது தலைமையில் போராட்டம் நடக்க உள்ளது என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.