
தகுதி நீக்க வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பின் யதார்த்தத்தை புரிந்துகொண்டு அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைய வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதையடுத்து தினகரன் அணியில் இருக்கும் தங்க.தமிழ்ச்செல்வன் இந்த அழைப்பு குறித்து, ‘’அதிமுகவில் இருந்த 90 சதவிகிதத்தினர் இன்று அமமுகவில் இருக்கின்றனர். பொதுமக்கள் ஆதரவும் எங்களுக்குத்தான் இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் மிக குறைவான உறுப்பினர்களை கொண்ட ஒரு அமைப்பு இணைய வேண்டும் என்று அழைத்தால் அதற்கு வாய்ப்பில்லை. அவர்கள் வேண்டுமானால் சில தலைகளை நீக்கிவிட்டு அமமுகவில் இணைந்தால் ஊழலற்ற ஆட்சியை கொடுக்க வாய்ப்பிருக்கிறது. மற்றபடி, இணைவதற்கு கூப்பிடுவதற்கே அவர்களுக்கு தகுதியில்லை’’என்று பதிலடி தந்துள்ளார்.
மேலும், தினகரனை விட்டு எங்களை மட்டும் அழைப்பது ஏன்? டிடிவி தினகரனை விட்டு நாங்கள் வரமாட்டோம் என்றும் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.