தகுதி நீக்கம் விவகாரம் தொடர்பாக ஓ.பி.எஸ். மற்றும் 11 எம்.எல்.ஏக்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
அண்மையில் பதினோரு எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யக்கோரி திமுக தொடுத்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சபாநாயரின் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிடமுடியாது என தீர்ப்பளித்து திமுகவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏக்கள் சார்பில் தனித்தனியாக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு இன்று தாக்கல் செய்யப்பட்டது.
பதினோரு எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் திமுக தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பிருக்கலாம் எனவே இக்காரணத்தை கருதியே உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.