தமிழ்நாட்டில் காலியாக உள்ள இரண்டு தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் மாதம் 21ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தங்கள் கட்சி சார்பில் வேட்பாளரை தேர்வு செய்ய விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தியது.
விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை இன்று அறிவிப்பதாக திமுக கூறியிருந்தது. அதுபோல் இன்று நடைபெற்ற நேர்காணலில் விழுப்புரம் மத்திய மாவட்ட பொருளாளராக செயல்படும் நா. புகழேந்தி (66) திமுக வேட்பாளராக போட்டியிடுவார் என அறிவித்தது. நேர்காணலில் விண்ணப்பித்த ஏ.ஜி. சம்பத்தை பின்தள்ளி புகழேந்தி இந்த வாய்ப்பை பெற்றார்.
புகழேந்தி, தி மு கவில் கடந்த 1973 ஆம் ஆண்டு தன்னை இணைத்துக்கொண்டார். கட்சியில் இவர் கிளை செயலாளர், மாவட்ட பிரதிநிதி, கோலியனுர் ஒன்றிய பொறுப்பாளர், பொதுக்குழு உறுப்பினர், செயற்குழு உறுப்பினர் ஊராட்சி மன்ற தலைவர், கோலியனுர் ஒன்றிய பெருந்துதலைவர் போன்ற பல்வேறு கட்சிப்பதவிகளை வகித்துள்ளார்.
புகழேந்தி கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவருக்கு பதிலாக ராதாமணி போட்டியிடுவார் என கட்சி தலைமை அறிவித்தது. கடந்த ஜூன் மாதம் 15 ஆம் தேதி புற்று நோயால் ராதாமணி இறந்தார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்டவரை விட 7000 வாக்குகள் முன்னிலை பெற்று வெற்றி பெற்றார் என குறிப்பிடதக்கது.
புகழேந்தி தான் போட்டியிடுவார் என முன்கூட்டியே நாம் சொல்லியிருந்தோம்.