Skip to main content

பதில் சொல்ல இயலாத நிலையில் உள்ளேன்... எடப்பாடி பழனிசாமி

Published on 17/05/2019 | Edited on 17/05/2019

 

முதலமைச்சரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
 

ஸ்டாலின், தினகரன் என எல்லோருடைய தேர்தல் பரப்புரையை கடந்து வரும் 19ஆம் தேதி நான்கு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது...
 

எங்களுடைய பரப்புரையை ஏற்றுக்கொள்ள மாட்டேங்கிறீங்களே.. என்னுடைய பரப்புரை, துணை முதல் அமைச்சர், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் எல்லோருமே பரப்புரை செய்திருக்கிறோம். எல்லாவற்றையும் கேளுங்கள்.

 

edappadi palanisamy



அரவக்குறிச்சியில் கமல்ஹாசனின் பேச்சு குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

 

நேற்றைய தினம் மதுரை உயர்நீதிமன்ற கிளை, இதுகுறித்து யாரும் ஊடகத்திலோ, பத்திரிகையிலோ அரசியல் கட்சித் தலைவர்கள் பேசாமல் இருந்தால் நல்லது என்று கூறியிருக்கிறது. அந்த அடிப்படையில் உங்களது கேள்விக்கு பதில் சொல்ல இயலாத நிலையில் உள்ளேன். 
 

தேனியில் கல்வெட்டு ஒன்றில் ரவீந்திரநாத் எம்.பி. என போட்டு வைத்துள்ளனர். அதைப்பற்றி...
 

தெரியவில்லை. எனது கவனத்திற்கு இதுவரை வரவில்லை.
 

தமிழகத்தில் குடிநீர் பிரச்சனை அதிகமாக இருக்கிறது...
 

பருவமழை சரியாக பெய்யாத காரணத்தினால் கடுமையான வறட்சி காரணமாக இந்த குடிநீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த குடிநீர் தட்டுப்பாடை போக்க வேண்டும் என்று ஏற்கனவே தேர்தலுக்கு முன்பாக சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளை அழைத்து அறிவுரை வழங்கியுள்ளோம். எந்தெந்த பகுதிகளில் வறட்சியால் குடிநீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளதோ, அந்த பகுதிகளில் உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தலையிட்டு அந்த பகுதி மக்களுக்க தேவையான குடிநீர் வழங்க வேண்டும் என்று உத்தரவு வழங்கி அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட இடங்களில் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. 
 

அண்ணா பல்கலைக்கழகத்தில் அரசின் தலையீடு இருப்பதாக துணை வேந்தர் சூரப்பா குற்றம் சாட்டியிருக்கிறார்... 
 

தவறான குற்றச்சாட்டு.  


 

 

மத உணர்வுகளை தூண்டக்கூடிய பேச்சுக்கள் நிறைய இருக்கிறது. அந்த மாதிரி பேசக்கூடியவர்கள் மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும்.
 

இது தேர்தல் நேரத்தில் நடந்த பரப்புரை. இதற்கு தேர்தல் ஆணையம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நடவடிக்கை எடுக்க முடியாது. தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டில் இவையெல்லாம் வருகிறது. தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி அரசியல் கட்சியினர் பேசினால் இப்படிப்பட்ட பிரச்சனை எழாது. அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுமே தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி பேசினால் நன்றாக இருக்கும். 

 

 


 

சார்ந்த செய்திகள்