டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக எடப்பாடி அறிவித்ததை மத்திய பாஜக அரசு ரசிக்கவில்லை என்கிற தகவல்கள் கசிந்திருக்கின்றன ! இந்த விவகாரத்தில் மத்திய அரசிடம் கலந்து ஆலோசிக்காமலும், மத்திய அரசின் அனுமதியைப் பெறாமலும் தன்னிச்சையாக முடிவெடுத்து செயலாற்றுவதாக தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்திடம் கடுமை காட்டியிருக்கிறதாம் மத்திய அரசு.
குறிப்பாக, மத்திய வேளாண்மைத்துறை அமைச்சக அதிகாரிகள், ’’உங்களுடைய அரசியல் தேவைகளுக்காக பல விசயங்களில் தன்னிச்சையாக முடிவெடுக்கிறீர்கள். பாதுக்காக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டால், ஏற்கனவே அந்த மாவட்டங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கிற மத்திய அரசின் திட்டங்களின் நிலை என்ன?‘’ என்பது உள்பட பல கேள்விகளை கேட்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில்தான், மத்திய அரசின் கோபத்தை குறைக்கவும் சந்தேகங்களைத் தீர்க்கவும் தனது வழக்கமான டெல்லி தொடர்புகள் மூலம் முயற்சி எடுத்திருக்கிறாராம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.