Published on 29/05/2019 | Edited on 29/05/2019
தமிழக்தில் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக,பாஜக கூட்டணி தேனி நாடாளுமன்ற தொகுதியை தவிர, போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் தோல்வி அடைந்ததது.இதனையடுத்து தோல்வி பெற்ற ஒரு சில சீனியர்களும்,கட்சி முக்கிய நிர்வாகிகளும் ராஜ்யசபா சீட் மூலம் எம்.பி.ஆகிவிடலாம் என்று போட்டி போட்டுகொண்டு இருக்கிறார்கள் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.மத்தியில் பாஜக ஆட்சி அமைக்க இருப்பதையடுத்து அதிமுக தலைமை மத்திய அமைச்சரவையில் இடம் கோரலாம் என்று முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின.இதில் எடப்பாடி தரப்பு கட்சியில் இருக்கும் சீனியரான வைத்தியலிங்கத்துக்கு மத்திய அமைச்சர் பதவி பெற்று தர முன்வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
ஆனால் ஓபிஎஸ்,தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற ஒரே தொகுதியான தேனி நாடாளுமன்ற உறுப்பினரும்,தனது மகனுமான ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய அமைச்சர் பதவி வாங்கி ஆகணும் என்ற முடிவில் இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் கூறி வருகின்றனர்.இதற்கு பிஜேபி தலைமையிடம் இருந்து க்ரீன் சிக்னல் வந்ததாக கூறப்படுகிறது.இதனால் அதிர்ப்தியில் இருக்கும் எடப்பாடி தரப்பு கட்சி சீனியர் வைத்தியலிங்கத்துக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று பாஜக தலைமையை கோரிவருவதாக சொல்லப்படுகிறது.இதனால் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய இணை அமைச்சர் கொடுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.