Skip to main content

கள்ளத்துப்பாக்கி கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்: ராமதாஸ்

Published on 09/01/2020 | Edited on 09/01/2020
ramadoss



குமரி மாவட்டத்தில் சோதனை சாவடியில் பணியில் இருந்தபோது துப்பாக்கியால் சுட்டு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை செய்யப்பட்டார். காரில் வந்த கும்பல் இந்த அட்டூழியத்தில் ஈடுபட்டது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

 

இந்த சம்பவம் குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், 
 

''கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மர்ம மனிதர்களால் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்தக் கொடுமையை செய்தவர்களை அடையாளம் கண்டு தண்டிக்க வேண்டும். காவலர் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்க வேண்டும்! 
 

தமிழ்நாட்டில் கள்ளத்துப்பாக்கி கலாச்சாரம் பெருகி விட்டதாக பல ஆண்டுகளாக குற்றஞ்சாட்டி வருகிறேன். அதற்கான ஆதாரம் தான் களியக்காவிளை துப்பாக்கிச்சூடு ஆகும். இனியும் இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் கள்ளத்துப்பாக்கி கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளார். 


 

 

சார்ந்த செய்திகள்