Published on 21/01/2019 | Edited on 21/01/2019

வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக திமுகவில் 6 பேர் கொண்ட குழு அமைத்து அறிவித்துள்ளார் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன்.
இக்குழுவிற்கு திமுக பொருளாளர் துரைமுருகன் தலைவராக உள்ளார். துணைப் பொதுச்செயலாளர் இ.பெரியசாமி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் கே.என்.நேரு, க.பொன்முடி, எ.வ.வேலு ஆகியோர் இக்குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர்.