சமீபத்தில் தி.மு.க.-வில் இருந்து விலகிய ராமலிங்கம் எடப்பாடியிடம் நடந்த சந்திப்பின் போது மு.க.அழகிரியை எடப்பாடியிடம் ராமலிங்கம் பேச வைத்தார் என்று சொல்லப்படுகிறது. இது பற்றி விசாரித்த போது, அழகிரிக்கு பா.ஜ.க, ரஜினி தரப்பு என்று பல சைடிலும் தொடர்பு இருக்கிறது என்கின்றனர். எடப்பாடியையும் அவர் பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. ஒரு கட்டத்தில், தி.மு.க. தலைமைக்கு எதிராக கே.பி.ராமலிங்கம் பேசிக் கொண்டு இருந்த போது அழகிரி அதைக் கண்டுக்கொள்ளவில்லை. தி.மு.கவிலிருந்து ராமலிங்கம் கட்டம் கட்டப்பட்டபிறகு, ஃபோன் செய்தால் அழகிரி அட்டெண்ட் செய்கிறார் என்றும் சொல்லப்பட்டது. இந்தக் கரோனா நேரத்தில், மதுரை வீட்டிலிருந்து அழகிரி வெளியே வருவதில்லை. பழைய விசுவாசிகளையும் சந்திப்பதில்லை என்ற பேச்சும் அடிபட்டு வருகிறது.
மேலும் குடும்ப உறவுகள் மூலமாக அழகிரி தரப்போடு தி.மு.க. தலைமை டச்சில்தான் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில், அழகிரிக்கோ அவர் குடும்பத்திற்கோ கட்சியில் எந்த முக்கியத்துவமும் தரப்படவில்லை. இதனால் அழகிரி என்ன முடிவெடுப்பார் என்று யூகிக்க முடியவில்லை என்றும் கூறுகின்றனர்.