Skip to main content

கனிமொழியிடம் வைத்த கோரிக்கை..! டிக் அடிப்பாரா ஸ்டாலின்..!

Published on 08/03/2021 | Edited on 08/03/2021

 

dmk

 

திமுக தலைமையிலான கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா ஆறு தொகுதிகள், முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள், மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

 

மேலும், கொங்கு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சிகளிடம் திமுக தலைமை பேசி வருகிறது. விரைவில் அந்தக் கட்சிகளுடனான உடன்பாடு இன்று அல்லது நாளை முடிவுடைய உள்ளது. வரும் 10ஆம் தேதி வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைமை அறிவிக்கும் என்றும் கூறப்படுகிறது.

 

இந்தநிலையில், திமுக மகளிர் அணி மாநிலச் செயலாளர் கனிமொழியிடம், மகளிர் அணியினர் ஒரு கோரிக்கை வைத்துள்ளனர். சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் 33 சதவிகித இடஒதுக்கீடு குறித்து திமுக வலியுறுத்திப் பேசி வருகிறது. அந்த வகையில் திமுக சார்பில் போட்டியிட மகளிருக்கு 33 சதவிகிதம் வாய்ப்பு அளிக்க வேண்டும். 33 சதவிகிதம் கொடுக்கவில்லை என்றாலும் 25 சதவிகிதமாவது போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். 

 

இந்த தகவல், திமுக தலைவர் ஸ்டாலின் கவனத்திற்கும் சென்றுள்ளதாம். கட்சியின் மூத்த தலைவர்கள் இதுகுறித்து விவாதித்து நல்ல முடிவை எடுப்பார்கள் என்றும், இறுதி செய்யும் முடிவு தலைவர் கையில் உள்ளதால், அவரும் நல்ல முடிவை எடுத்து தங்கள் கோரிக்கையை ஏற்று டிக் செய்வார் என்றும் நம்பிக்கையில் உள்ளனர் மகளிர் அணியினர். 

 

 

 

சார்ந்த செய்திகள்