Skip to main content

திமுக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு?

Published on 21/05/2019 | Edited on 21/05/2019

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் மத்தியில் பாஜகவுக்கும், மாநிலத்தில் திமுகவுக்கும் வெற்றி வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய கருத்துக்கணிப்பில் திமுக அணிக்கு 35 நாடாளுமன்ற தொகுதிகள் கிடைக்கும் என்றும், பாஜக அணிக்கு 300க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கும் என்றும் அந்த கருத்துக்கணிப்பில் கூறப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி அதாவது நாளை மறுதினம்  நடைபெற இருக்கிறது. 

dmk



இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை அனைத்து ஊடகங்களும் விவாதித்து வருகின்றன. மேலும் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்தியா டுடே- ஆக்சிஸ் மை இந்தியா நாடு முழுவதும் உள்ள நாடாளுமன்ற தொகுதி வாரியாக வெற்றி வாய்ப்பு குறித்த புதிய கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளன. 


அதன்படி திமுகவுக்கு சென்னை வடக்கு, சென்னை தெற்கு, சென்னை சென்ட்ரல், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், ஈரோடு, நீலகிரி, பொள்ளாச்சி, திண்டுக்கல், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, தூத்துக்குடி, தென்காசி, நெல்லை ஆகிய 20 தொகுதிகளிலும் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் என தெரிகிறது.இதன் படி பார்த்தால் திமுக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக கூறப்படுகிறது.

 

சார்ந்த செய்திகள்