சமீபத்தில் தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந் கிஷோரின் ஐ-பேக் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவது பற்றி அதிகாரப்பூர்வமாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். தமிழக இளைஞர்களை ஐ-பேக் நிறுவனத்தின் வழியே எங்களுடன் பணிபுரிய உள்ளனர் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இது பற்றி பல்வேறு அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வந்தனர். அதே போல் பாமகவின் ராஜ்யசபா எம்.பி அன்புமணி ராமதாஸ் பேசும் போது திமுகவிடம் உள்ள சரக்கு மக்கிப்போன சரக்கு, ‘மக்கு’கின்ற சரக்கு என்று கூறியிருந்தார்.
#ஒரு_குட்டி_கதை_சொல்லட்டும்மா
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) March 2, 2020
சிலர் ஒரு கடைக்கு சென்று நன்றாக சாப்பிட்டு விட்டு, கடைக்காரரிடமே பணமும் கேட்டு,
கடைக்காரர் இல்லை என்றதும்,
ச ச மக்கிப்போன சரக்கு என்று சொல்லி விட்டு
பக்கத்து கடைக்கு சென்று சரக்கு அடித்து....
இதுவே ஒரு பொழப்புன்னு..
இதுக்கு பேரு என்ன தெரியுமா pic.twitter.com/OJEOUNaDVI
இந்த நிலையில், அன்புமணி ராமதாஸ் கூறிய கருத்துக்கு திமுகவின் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினரும், அன்புமணியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றவருமான டாக்டர். செந்தில்குமார் எம்.பி, இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், சிலர் ஒரு கடைக்கு சென்று நன்றாக சாப்பிட்டு விட்டு, கடைக்காரரிடமே பணமும் கேட்டு, கடைக்காரர் இல்லை என்றதும், ச ச மக்கிப்போன சரக்கு என்று சொல்லி விட்டு பக்கத்து கடைக்கு சென்று சரக்கு அடித்து.... இதுவே ஒரு பொழப்புன்னு.. இதுக்கு பேரு என்ன தெரியுமா என்று குட்டிக்கதை மூலம் விமர்சனம் செய்துள்ளார். இவருடைய இந்த கருத்துக்கு திமுகவினர் ஆதரவாகவும், பாமகவினர் எதிர்ப்பாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.