தமிழக வடமாவட்டத்தை சேர்ந்த அந்த எம்.எல்.ஏ. கடந்த மே மாதம் நடைபெற்ற 18 தொகுதி இடைத்தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர். அவருக்கு இதய நோய் இருந்துள்ளது. இதனை மறைத்து தலைமையிடம் சீட் வாங்கி வெற்றி பெற்றுள்ளார். சமீபத்தில் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றபோது, அந்த எம்.எல்.ஏ சட்டமன்றத்திற்கு வந்து கையெழுத்திட்டுவிட்டு அப்படியே சென்றுள்ளார். கூட்டத்தில் எதிலும் கலந்துக்கொள்ளவில்லையாம்.
கட்சி கொறடா அவை நடைபெறும் நாளில் சட்டமன்றத்திற்கு வந்த எம்.எல்.ஏக்கள் குறித்த தகவலை தலைமைக்கு தெரியப்படுத்த வேண்டுமாம். இந்த எம்.எல்.ஏ மிஸ்சாகியுள்ளார். செல்போனில் தொடர்பு கொண்டும் எடுக்கவில்லையாம்.
இதுதொடர்பாக அந்த எம்.எல்.ஏவின் கட்சி மா.செவிடம் தொடர்பு கொண்டு கொறடா விசாரித்தபோது, விசாரிக்கறண்ணே என்று சொல்லிவிட்டு போன் செய்தும் எடுக்கவில்லையாம். அவருடன் இருப்பவர்களை தொடர்பு கொண்டபோது, எம்.எல்.ஏ விடுதியில் படுத்துக்கிட்டு இருக்கார் என பதில் சொன்னார்களாம். பகலிலேயேவா என அதிர்ச்சியாகி எம்.எல்.ஏவுடன் உள்ள நிர்வாகிகளை திட்டியுள்ளார்.
இந்நிலையில் அந்த எம்.எல்.ஏவுக்கு உடல்நிலை சரியில்லையென அப்போல்லோ மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவருக்கு இதயத்தில் பிளாக் எனச்சொல்லியுள்ளார்களாம் மருத்துவர்கள். ஆப்ரேஷன் செய்யனும் எனச்சொல்லியுள்ளார்களாம். பின்னர் எம்.எல்.ஏவை தொடர்பு கொண்டு கட்சி தலைமையில் இருப்பவர்கள் நலம் விசாரித்துள்ளார்கள். அந்த எம்.எல்.ஏவுக்கு ஜனவரி 13ந்தேதி மதியம் ஆஞ்சியோ செய்துள்ளார்கள் என்கிறார்கள் திமுகவினர்.
இந்த விவகாரத்தை எம்.எல்.ஏவின் நலன் விரும்பிகளும், கட்சி தலைமையும் வெளிப்படுத்தாமல் கமுக்கமாகவே வைத்துள்ளது. இது அந்த மாவட்டத்தில் பெரும் பரபரப்பாக உள்ளது.