Published on 05/08/2019 | Edited on 05/08/2019
வேலூர் பிரச்சாரத்துக்கு உதயநிதி போனாரு, கனிமொழி போகலைன்னு அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டது. வேலூரில் 31, 1 ஆகிய தேதிகளில் கனிமொழி பிரச்சாரம் செய்வதா முதலில் முடிவாச்சு. அதன்பிறகுதான் நாடாளுமன்றக் கூட் டத்தொடர் 7-ந் தேதி வரை நடக்கும்னு அறிவிக்கப்பட்டது. பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்றிடனுங்கிற திட்டத்தோடுதான் இந்தக் கால நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கு. அப்படிப்பட்ட நேரத்தில் மக்களவைக்குப் போகாமல் இருக்கக் கூடாதுங்கிற நிலை ஏற்பட்டிருக்கு.
ஏன்னா, என்.ஐ.ஏ. தொடர்பான மசோதாவின் மீது உரிய எதிர்ப்பைக் காட்டலைங்கிற விமர்சனம் தி.மு.க. .மீது எழுந்திருக்கும் நிலையில், மக்களுக்கு எதிரான மசோதாக்கள் எதுவும் வைக்கப்பட்டால், அதற்குரிய எதிர்ப்பைக் கடுமையாகத் தெரிவிக்கணும்னு கட்சித் தலைவர் ஸ்டாலினிடமிருந்து கனிமொழி உள்ளிட்டவர்களுக்கு சொல்லப்பட்டிருக்கு. அதனால்தான் கனிமொழி வேலூருக்கு வரமுடியலைன்னு கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் கனிமொழி உள்பட அனைத்து திமுக எம்பி களையும் டெல்லியிலிருந்து பணிகளை கவனிக்கச் சொல்லி முக ஸ்டாலின் அறிவுறுத்தியதாகவும் அதன் பெயரில் தான் கனிமொழி திட்டமிட்டிருந்த தேர்தல் பிரச்சாரத்துக்கு வரவில்லை என்று தெரிவிக்கின்றனர்.