தமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த மாதம் 27, 30-ந்தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.இதில் 515 மாவட்ட வார்டு உறுப்பினர் பதவிகளில் தி.மு.க.வுக்கு 244 இடங்களிலும், அ.தி.மு.க.வுக்கு 214 இடங்களிலும் வெற்றி கிடைத்தது. தி.மு.க. கூட்டணி அ.தி.மு.க.வை விட 30 மாவட்ட வார்டு உறுப்பினர்களை பெற்றது. 5,090 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் இடங்களில் தி.மு.க. 2,099 இடங்களிலும், அ.தி.மு.க. 1,789 இடங்களிலும் வெற்றி பெற்றன. அதுபோல தி.மு.க. கூட்டணி கட்சிகளும் அதிக இடங்களில் வெற்றி பெற்று இருந்தது. இதனையடுத்து திமுக, அதிமுக கட்சிகளில் சீட் கிடைக்காத அதிருப்தி நிர்வாகிகள் மாவட்ட தலைமை மற்றும் கட்சி தலைமை மீதும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
கழக இணை ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு முதல்வருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் திரு.N.K.பெருமாள் Ex.MLA அவர்கள், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் திரு.வரதராஜ பெருமாள் ஆகியோர் நேரில் சந்தித்து கழகத்தில் இணைந்தனர். pic.twitter.com/9q1aEKdsxZ
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) March 3, 2020
இந்த நிலையில், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் திமுகவை சேர்ந்த தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவரும், விளாத்திகுளம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பெருமாள், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தலைவர் எம்.கே.பி. வரதராஜபெருமாள் ஆகியோர் முதலமைச்சர் பழனிச்சாமியை நேரில் சந்தித்து தங்களை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். அப்போது தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளரும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் ராஜு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் சண்முகம் எம்எல்ஏ, சின்னப்பன் எம்.எல்.ஏ ஆகியோர் உடன் இருந்தனர். இதனால் திமுக தலைமை அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.