திமுக தலைமைச் செயற்குழுவில் பங்கேற்றவர்கள் என்னவிதமான நிர்வாக மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில், அறிவாலய மேலிடத்தில் முதன்மைச் செயலாளர் பதவியில் டி.ஆர்.பாலுவுடன் கே.என்.நேருவையும் நியமிப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டுள்ளது. திருச்சி பெரம்பலூர் மாவட்ட ஊராட்சித் தேர்தலில் தி.மு.க.வுக்கு முழுமையான வெற்றி கிடைக்கச் செய்ததற்காக நேருவுக்கு இந்த புரமோஷன் எனப் பேசப்பட்ட நிலையில், ஒரே பதவியில் இருவர் இருப்பதில் டி.ஆர்.பாலுவுக்குத் தயக்கம் இருந்ததால், அது பற்றி அடுத்த சில நாட்களில் முடிவெடுக்கலாம் என்று சொல்லப்பட்டது.
.
இந்த நிலையில், தி.மு.கவின் தலைமை நிலைய முதன்மைச் செயலாளர் பதவியில் இருக்கும் டி.ஆர்.பாலு, ஏற்கனவே நாடாளுமன்ற குழுத்தலைவராக உள்ளார் என்பதால் ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் அவர் தலைமை நிலைய முதன்மைச் செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்படலாம் என்றும், அந்த பதவிக்கு கே.என்.நேரு விரைவில் நியமிக்கப்படலாம் கூறி வந்த நிலையில், கே.என்.நேருவிற்கு தலைமை நிலைய முதன்மைச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்ட்டுள்ளதால் திருச்சி மாவட்ட செயலாளர் பதவிக்கு வேறு ஒருவரை நியமிக்கப்படலாம் என்றும் கூறுகின்றனர். இந்நிலையில் நேற்று திமுகவின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துடன், கே.என்.நேருவும் கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் இல்லத்திற்கு சென்று கலைஞர் புகைப்படம் முன்பு கண்ணீர் விட்டு அழுது மரியாதை செலுத்தியுள்ளார்.