Published on 22/01/2021 | Edited on 22/01/2021
சென்னை கலைஞர் அரங்கில் 21-01-2021 அன்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. பேரரிவாளன் உள்ளிட்ட எழு பேர் விடுதலை, விவசாயிகள் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டியும், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரியும், பொள்ளாச்சி வழக்கில் முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்பன போன்ற முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சமூக இடைவெளியுடன் நடைபெற்ற அக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் என உறுதியேற்றது குறிப்பிடத்தக்கது.