Published on 29/04/2021 | Edited on 29/04/2021
![DMK district secretaries meeting tomorrow!](http://image.nakkheeran.in/cdn/farfuture/Aj4e6M5Lv9P83rVf1NJytGUcjYRoyrRMwAL0IkjiQdg/1619714436/sites/default/files/inline-images/r458777.jpg)
சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்து வாக்கு எண்ணிக்கைக்காக தமிழகம் காத்திருக்கிறது. 'ஸ்ட்ராங் ரூம்' எனப்படும் கட்டுப்பாட்டு அறையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. வரும் மே 2 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட இருக்கிறது.
இந்நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் இன்று மாலை வெளியாகியிருந்தது. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள், வேட்ப்பாளர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. நாளை மாலை 5 மணிக்கு காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த இருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.