Published on 01/10/2018 | Edited on 01/10/2018

மதுரை திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதியில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலை சந்திக்க தொகுதியில் உள்ள 295 பூத்துகளுக்கும் தலா 100 பேர் கொண்ட பூத் கமிட்டி அமைக்கும் பணி நடைபெறுகிறது. அந்த பூத் கமிட்டியை தேர்ந்தெடுப்பதற்கு மதுரை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டம் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றது. இப்படி அமைக்கப்படும் பூத் கமிட்டிகளை நிர்வகிக்கும் பொறுப்பு மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், அணி அமைப்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வடக்கு மாவட்டச் செயலாளர் பி.மூர்த்தி, தெற்கு மாவட்டச் செயலாளர் மணிமாறன், வடக்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.