Skip to main content

அதிமுக கோட்டையை தகர்த்த திமுக - ஸ்டாலின் அதிரடி!

Published on 13/06/2019 | Edited on 13/06/2019

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி 38 இடங்களை கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது.அதிமுக, பாஜக கூட்டணி தமிழகத்தில் படுதோல்வி அடைந்தது.இது அதிமுகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.தேர்தலில் முடிந்த பிறகு அதிமுக,திமுக இரண்டு கட்சிகளுமே தேர்தல் முடிந்து பிறகு நன்றி தெரிவித்து கூட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொள்ளாச்சி தொகுதியில் நடந்த நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் கலந்து பேசினார்.அப்போது, தேர்தல் நடந்த சமயத்தில் வாக்கு கேட்பதற்காக உங்களைத் தேடி ஓடோடி வந்தேன். அதுபோல நன்றி தெரிவிப்பதற்காகவும் உங்களை தேடி ஓடோடி வந்துள்ளேன். 
 

stalin



திமுக கூட்டணிக்கு வாக்களிக்காதவர்களுக்குச் சேர்த்து குரல் கொடுத்து ஏன் திமுகவுக்கு நான் வாக்களிக்கவில்லை என்று எண்ணக் கூடிய வகையில் திமுக எம்.பி.க்கள் செயல்பட உள்ளனர் என தெரிவித்தார்.தொடர்ந்து, கொங்கு மண்டலத்தை அதிமுகவின் கோட்டை என்று கூறுவார்கள். ஆனால், அதிமுகவின் கோட்டை என்று கூறப்பட்ட கூற்றை மக்கள் உடைத்து ஆயிரத்தில் அல்ல, லட்சத்தில் வெற்றிபெற வைத்திருக்கிறார்கள் மக்கள் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு பேசினார். இடைத் தேர்தலில் 9 தொகுதியில் வெற்றி பெற்று ஆட்சியை அதிமுக தக்கவைத்துக் கொண்டது. இதனால் அதிமுகதான் வெற்றிபெற்றுள்ளது என்று சிலர் கூறி வருகிறார்கள். 

  stalin



நடைபெற்ற 22 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் திமுக 13 இடங்களில் வெற்றிபெற்றது.ஆளுங்கட்சியான அதிமுக 9 இடங்களில் மட்டுமே வென்றது. இதில் 13 பெரிதா அல்லது 9 பெரிதா? அதிமுகவிடமிருந்த 12 தொகுதிகளை திமுக கைப்பற்றியுள்ளது என்றால் இதில் யாருக்கு வெற்றி" எனக் கேள்வி எழுப்பினார். இப்போது வேண்டுமானால் ஆட்சியமைக்க முடியாமல் போயிருக்கலாம். ஆனால், விரைவில் திமுக ஆட்சிப் பொறுப்பில் அமரப் போகிறோம். அதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் திமுக ஆட்சிக்கு வந்ததும் பொள்ளாச்சிக்கு ஏற்பட்ட களங்கம் துடைக்கப்படும் என உறுதி அளித்தார்.

சார்ந்த செய்திகள்