Skip to main content

சட்டத்தின் பிடியில் மாட்டி உள்ள இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். ராஜினாமா செய்ய வேண்டும்: இயக்குனர் கவுதமன்

Published on 19/07/2018 | Edited on 19/07/2018
ops-eps


சட்டத்தின் பிடியில் மாட்டி உள்ள எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று இயக்குனர் கவுதமன் கூறியுள்ளார்.
 

அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 
 

தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் சொல்ல முடியாத அளவுக்கு ஊழல்கள் செய்து சட்டத்தின் பிடியில் மாட்டி உள்ளனர். முதல்–அமைச்சர் எடப்பாடி உறவினர் என்று சொல்லப்படுகின்ற நெடுஞ்சாலை துறை ஒப்பந்தக்காரர் வீட்டில் வருமான வரி சோதனையில் ரூ.100 கோடிக்கு மேல் பணம், கிலோ கணக்கில் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வளவு பணமும் நகையும் எப்படி ஒரு இடத்தில் இருக்க முடியும். 

 

 


முதல்–அமைச்சரின் உறவினர் என சொல்லப்படும் பட்டசத்தில், இக்குற்றங்களுக்கு யார் பொறுப்பேற்பது. மேலும், துணை முதல்–அமைச்சர் பன்னீர்செல்வம் மீதும் ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றமே ஏன் சி.பி.ஐ. விசாரிக்க கூடாது என கேள்வி எழுப்பியுள்ளது. எனவே ஊழல் கறைபடிந்துள்ள இருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு, சட்டத்தின் முன் நின்று இந்த ஊழலில் சம்பந்தப்பட்டவர்களா இல்லையா என நிரூபிக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார்கள். இவ்வாறு கூறினார். 

 

சார்ந்த செய்திகள்