திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் தேர்தலை முன்னிட்டு இன்று (18.04.2019) வாக்குப்பதிவு நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜி.வினய் அவர்கள் தனது துணைவியார் ரூபாவுடன் கவாடக்கார தெருவில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நின்று வாக்குப்பதிவு செய்தார். தமிழக வனத்துறை அமைச்சரும், திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழுத் தலைவருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் தனது துணைவியார் நாகேஸ்வரி மற்றும் மகன்கள் சி.எஸ்.இராஜ்மோகன், சி.எஸ்.சதீஸ் ஆகியோருடன் எம்.வி.எம். கல்லூரிக்கு வந்து வரிசையில் நின்று வாக்களித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

இதுபோல திண்டுக்கல் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் மாநகர மேயருமான வி.மருதராஜ், தனது மகன்கள் எம்.செல்வகனி மருதராஜ், எம்.வீரமார்பன் என்ற பிரேம்மருதராஜ் மற்றும் மருமகள்கள் ரூபபாரதி செல்வகனி, ஜெயகிருபா பிரேம் அவர்களுடன் கோவிந்தாபுரம் காந்திஜிஅரசுப் பள்ளிக்கு வந்து வாக்களித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
இதுபோல கட்சி நிர்வாகிகள் அதிகாலையிலேயே வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களித்த வண்ணம் இருந்தனர். வாக்களித்துவிட்டு வாக்குச்சாவடியைவிட்டு வெளியேவந்த தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் பார்வையிட சென்றார்.