Skip to main content

தங்க தமிழ்ச்செல்வனின் பேச்சால் தினகரன் அப்செட்!

Published on 23/07/2019 | Edited on 23/07/2019

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தினகரனின் அமமுக கட்சி படுதோல்வி அடைந்தது. இதனால் அக்கட்சியிலிருந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாற்று கட்சியில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக செந்தில்பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், இசக்கி சுப்பையா, சசிரேகா மற்றும் சிலர் தினகரன் கட்சியில் இருந்து வெளியேறியது தினகரனுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த நிலையில் செந்தில்பாலாஜியும், தங்க தமிழ்ச்செல்வனும் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். நேற்றைய முன்தினம் தேனி மாவட்டத்தில் நடந்த மாநாட்டில் அதிமுக, அமமுக கட்சியை சேர்ந்த பல்வேறு நிர்வாகிகளும், தொண்டர்களும் திமுகவில் இணைந்தனர். 
 

ammk



அப்போது மேடையில் பேசிய தங்க தமிழ்ச்செல்வன், ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் அதிமுக அரசில் ஊழல் அதிகமாக இருந்தது.அதனால் அதிமுகவை விட்டு வெளியேறி தினகரன் கட்சியில் இருந்தேன். ஆனால் மக்கள் தினகரன் கட்சியை ஏற்கவில்லை.மேலும் செத்த பாம்பை அடிக்க கூடாது என சொல்லுவார்கள் அதனால் அவரை பற்றியும், அவரது கட்சியை பற்றியும் பேச விரும்பவில்லை என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறினார். தங்க தமிழ்ச்செல்வனின் இந்த பேச்சால் தினகரன் கட்சி நிர்வாகிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். தினகரன் கட்சியில் இருக்கும் போது தினகரனின் நம்பிக்கைக்கு உரிய நபர்களில் தங்கத்தமிழ்செல்வனும் ஒரு முக்கிய நபராக இருந்தார். தற்போது பொது மேடையில் தினகரனையும், அவரது கட்சியையும் கடுமையாக விமர்சனம் செய்தது அக்கட்சியினரை அப்செட்டில் ஆழ்த்தியுள்ளது என்கின்றனர். 

சார்ந்த செய்திகள்