Skip to main content

மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் போராட்டம்!

Published on 23/07/2020 | Edited on 23/07/2020
CPI(M) proest

 

சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கரானா காலத்தில் பொதுமக்களுக்கு வாழ்வாதர நிதியாக மாநில அரசு ரூ5000 மற்றும் மத்திய அரசு ரூ.7500 வழங்க வலியுறுத்தி கடலூர் மாவட்டத்தில் 300 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் சிதம்பரம் நகரத்தில் 15 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

CPI(M) proest

 

வடக்குவீதியில் நடைபெற்ற போராட்டத்தில் நகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் மூசா, நகர்குழு உறுப்பினர்கள் கலியமூர்த்தி, கோபால் உள்ளிட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு நிவாரணம் கொடுக்க வலிறுத்தி கோசங்களை எழுப்பினார்கள்.

 

CPI(M) proest

 

இதேபோல் புவனகிரி, காட்டுமன்னார்கோவில், குமராட்சி, பரங்கிப்பேட்டை, கீரப்பாளையம், திருமுட்டம் உள்ளிட்ட பகுதிகளில் ஒவ்வொரு ஒன்றியங்களிலும் சுமார் 20 இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

 

 

சார்ந்த செய்திகள்