Skip to main content

அவருக்கு ஏதாவது நேர்ந்தால் இ.பி.எஸ் தான் பொறுப்பு! -ஜவாஹிருல்லா பேட்டி

Published on 15/04/2018 | Edited on 15/04/2018
M. H. Jawahirullah


 

தமிழக அரசு மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர உள்ளோம் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறினார்.
 

கோவை போலீஸ் கமிஷனர் பெரியய்யாவை சனிக்கிழமை மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா சந்தித்து மனு கொடுத்தார்.
 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 
 

கோவை சிறையில் ஆயுள்தண்டனை கைதிகளாக அடைக்கப்பட்ட வசீர், ரிஸ்வான், தஸ்தகீர், சபீர் ஆகிய 4 பேர் உயிரிழந்துள்ளனர். இருசிறுநீரகமும் பாதிக்கப்பட்டுள்ள அபுதாகிர் என்ற கைதி மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளார். சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டும் அபுதாகிரை தமிழக அரசு இது வரை விடுதலை செய்யவில்லை. எனவே தமிழக அரசு மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர உள்ளோம். ஒரு மாத பரோலுக்கு பின்னர் மீண்டும் அபுதாகிரை சிறையில் அடைத்ததன் காரணமாக உடல் நலம் மீண்டும் பாதிக்கப்பட்டு உள்ளது.
 

எனவே சிறை முன்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்தோம். தற்போது அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவரது சிகிச்சைக்கான செலவுகளை ஏற்று உள்ளோம். அபுதாகிருக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு எடப்பாடி பழனிசாமி அரசுதான் பொறுப்பு ஏற்கவேண்டும். அபுதாகிருக்கு நிரந்தரமாக பரோல் கொடுக்க வேண்டும், அல்லது அவரை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். நீண்ட காலமாக சிறையில் இருப்பவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின்போது அறிவிக்கப்பட்டது ஆனால் இதுவரை யாரையும் தமிழக அரசு விடுவிக்க வில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

 

சார்ந்த செய்திகள்