Skip to main content

திமுகவுக்கு ஒரு நீதி!  அதிமுகவுக்கு ஒரு நீதி! -எடப்பாடிக்கு எதிராக திமுகவினர்

Published on 26/04/2020 | Edited on 26/04/2020


ஊரடங்கினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்குக் கொடுக்கப்படும் நிவாரண உதவிகளின் போது சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்றும், முகக் கவசங்கள் அணிய வேண்டும் என்றும் தமிழக அரசும், உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டிருக்கிறது. இதனை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் கடுமையாகக் கடைப்பிடிக்கின்றன. 


 

 

 admk


ஆனால், ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் பின்பற்றுவதே இல்லை. அமைச்சர்கள் தொடங்கி கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வரை சமூக இடைவெளியைப் பின்பற்றாமலே நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். இது குறித்து தங்களது மேலிடத்திற்கு உளவுத்துறையினர் புகார் தெரிவித்தாலும் ஆட்சியாளர்கள் அதனைக் கண்டுகொள்வதில்லை. 
 

 admk


அதிமுக- வின் வடசென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் பாலகங்கா, சென்னை சத்யாநகர் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதாக அறிவித்தார்.. அதற்கான நிகழ்வையும் நடத்தினார் பாலகங்கா. நிவாரண உதவிகள் வழங்குவதை அறிந்து சத்யாநகரிலுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடி விட்டனர். ஆனால், ஒருத்தர் கூட சமூக இடைவெளியைப் பின்பற்றவில்லை. கணிசமானவர்களைத் தவிர, பெரும்பாலானோர் முகக்கவசமும் அணியவில்லை. 
 

 admk

 

http://onelink.to/nknapp


சமூக இடைவெளியைப் பின்பற்றி பொருட்களை வழங்குவதற்கான எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் எடுக்காமலே கூட்டம் கூட்டமாகப் பொருட்களை வாங்கிச் செல்ல அனுமதித்தனர். பொது நிகழ்ச்சியைப் போல நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன. கரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாமலே அனைத்தும் காவல்துறையின் முன்னிலையிலே நிவாரண உதவிகளைக் கொடுத்து முடித்தார் பாலகங்கா. 
 

 admk


தற்போது இந்த விவகாரத்தை அறிந்துள்ள வடசென்னை திமுக நிர்வாகிகள், "தமிழகம் முழுவதும் நிவாரண உதவிகள் வழங்கும் திமுகவினர், சமூக இடவெளியைக் கடைபிடிக்கின்றனர். அப்படிச் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும், முகக் கவசம் அணிந்தும் நிவாரண உதவிகளை வழங்கிய சேலம் மாவட்ட முன்னாள் மேயர் திமுக ரேகா பிரியதர்ஷினி, சேலம் மாவட்ட திமுக பொறுப்பாளர் சிவலிங்கம் உட்பட 40 திமுக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்தது எடப்பாடி அரசு. தற்போது அதிமுக மா.செ.பாலகங்கா வழங்கிய நிவாரண உதவி நிகழ்ச்சியில் சமூக இடவெளி கடைப்பிடிக்கவில்லை. ஏதோ வெள்ள நிவாரண உதவிகளை வழங்குவது போல இதனை நடத்தியிருக்கிறார்கள். இவைகள் அனைத்தும் காவல்துறையினர் முன்னிலையிலேயே நடந்துள்ளது. ஆனால், பாலகங்கா உள்ளிட்ட அதிமுகவினர் மீது எந்த வழக்கும் பதியப்படவில்லை. திமுகவுக்கு ஒரு நீதி ; அதிமுகவுக்கு ஒரு நீதி என நடந்து கொள்கிறது எடப்பாடி அரசின் காவல்துறை. இது குறித்து எங்கள் தலைமையின் கவனத்துக்கு எடுத்துச் செல்லவிருக்கிறோம்!" என்கிறார்கள் கோபமாக!

 

சார்ந்த செய்திகள்