சொத்துக்குவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 வருடம் சிறை தண்டனை விதித்தது கடந்த 2017 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா தற்போது 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறைவு செய்துள்ளார். இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே தண்டனை உள்ளது என்கின்றனர். இதனையடுத்து சசிகலாவின் சகோதரர் திவாகரன் மகன் திருமணத்தில் சசிகலா கலந்து கொள்ள கட்டாயம் வருவார் என்று சசிகலா தரப்பு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். அப்போது சசிகலா பரோலில் வந்தால் அதிமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் ரகசியமாக சந்திக்கவும் திட்டம் போட்டதாக கூறிவந்தனர். இதனால் எடப்பாடி தரப்பு சற்று அதிருப்தியில் இருந்ததாகவும் சொல்லப்பட்டது.
இந்த நிலையில் திவாகரன் மகன் திருமணத்திற்கு சசிகலா பரோலில் வெளிவராததால் சசிகலா தரப்பு மற்றும் அதிமுகவில் இருக்கும் சசிகலாவின் விசுவாசிகள் அதிர்ச்சி அடைந்ததாக சொல்லப்படுகிறது. அதுபோல் சசிகலா பரோலில் வெளிவந்தால் அவரை அதிமுகவினர் யாரும் சசிகலாவுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும், சந்திக்கவும் கூடாது என்றும் எடப்பாடி பழனிச்சாமி தடை போட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் வரும் அக்டோபர் அல்லது அதற்கு முன் கூட்டியே சசிகலா வெளியே வந்து அதிமுகவினரின் ரகசியங்களை சசிகலா வெளியிட்டால் என்ன செய்வது என்று அதிமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் புலம்பி வருவதாகவும் சொல்லப்படுகிறது.